உத்தரகாண்டின் பரோலா என்னும் இடத்தில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா. இவர் தனது வீட்டில் இருந்து 10 கி மீ தொலைவில் வேலைசெய்து வருகிறார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் இவர் சக மனிதர்களை போல வாகனம் மற்றும் பேருந்தை பயன்படுத்தாமல் 10 கி மீ தூரம் ஓடியே வீட்டை அடைகிறார்.
இதுகுறித்து கேட்ட போது அவர் ராணுவத்தில் சேறுவதற்காக காலையில் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் காலை சமையல் செய்த பிறகுதான் பணிக்கு செல்ல முடியும் என்பதனால் அவர் பணி முடிந்து 10 கி மீ தூரம் ஓடியே வீட்டுக்கு செல்வதாக கூறினார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் “இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது ! என்ன ஒரு மனிதர் !” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
https://twitter.com/KP24/status/1505791422485733377