Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவனுக்கு நடந்த கொடுமை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டியில் கூலித் தொழிலாளியான மாரி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு மாரிசெல்வம் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.

இந்த விளக்கினை விசாரித்த நீதிமன்றம் மாரி செல்வத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |