சிறுவனை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனையை மாற்றி சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் குஜராத்தை சேர்ந்த டானிஷ் படேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 18. 12. 2019 அன்று அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீரனூர் காவல்துறையினர் டானிஷ் படேலை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் டானிஷ் படேலூக்கு தூக்குத் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக டானிஷ் படேல் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி டானிஷ் படேலுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து அதற்கு பதிலாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.