Categories
தேசிய செய்திகள்

சிறுவனை கடித்த நாய்…. எதுவும் தெரியாதது போல் அசால்டா நின்ற உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசத்தின் ராஜ்நகர் எக்‌ஷ்டன்ஷன் பகுதி அருகில் சார்ம்ஸ் கேஸ்டில் சொசைட்டி என்ற குடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மேல் தளங்களுக்கு போக லிப்ட் வசதி உள்ளது. அதன்படி லிப்டிற்குள் பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் ஏறி இருக்கிறார். அப்போது லிப்டிற்குள் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சிறுவன் நாயை பார்த்ததும் அச்சப்பட்டு சற்று விலகிச் சென்றான். இதனைக் கவனித்த நாய் சிறுவனை காலில் கடித்தது.

இதனால் சிறுவன் வலியால் அலறினான். எனினும் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத அப்பெண், மாறாக சிறுவனை திட்டுவது போல தெரிகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிய கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அதன்பின் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி நாயின் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக காசியாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |