தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறான். அந்த சிறுவனுக்கு 3 வாலிபர்கள் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாகல்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிறுவனிடம் போதைபொருள் கொடுத்து பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து திருநெல்வேலியில் இருக்கும் சிறுவர் கூர்நோக்கி இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.