Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் இயக்கிய மதகு பழுதானதால்…. பெரும் பரபரப்பு….. சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பி.ஏ.பி திட்ட தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் மதகை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த மதகு பழுதானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் மதகை உடனடியாக மூட முடியவில்லை. பின்னர் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களை கொண்டு மதமும் மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன் பின் இன்ஜினியர்களால் ஸ்டார்டர் பழுது சரி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பரப்பிகுளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையில் இது போன்ற சம்பவத்தினால் மதகை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்திருந்தது. மேலும் சமூக ஆர்வலர்கள் அணை பாதுகாப்பு பணிகளில் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |