சென்னை இரும்புலியூர் அருகில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஞானபிரகாசம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசத்தை அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் ஞானப்பிரகாசம் மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டியது சிறுவன் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பள்ளிக்கரணை பகுதியில் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்த ராஜேந்திரன் என்பவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் வேளச்சேரியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயர்ந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.