Categories
தேசிய செய்திகள்

சிறுவன் கடத்தி கொலை…. எழுத்து பிழையால் சிக்கிய கொலையாளி….!!

சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி எழுத்துப்பிழையால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் என்பவர் தனது உறவினரின் மகனை கடத்திச் சென்றுள்ளார். அதோடு அன்று இரவே ஒரு மொபைலில் இருந்து சிறுவனின் தந்தைக்கு 2 லட்சம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் “இரண்டு லட்சம் பணத்துடன் சீதாப்பூருக்கு வர வேண்டும். போலீசிடம் புகார் கொடுத்தால் மகனைக் கொன்று விடுவேன் என எழுதியிருந்தார். பெற்றோரால் பணத்தை தயார் செய்ய முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வந்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சைபர் கண்காணிப்புத் துறையின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே குற்றவாளி அனுப்பிய குறுஞ்செய்தியில் எழுத்துப் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. போலீஸ் என்பதை புலிஸ் என்றும் சித்தாப்பூர் என்பதை சிட்டா பூர் என்றும் எழுத்துப் பிழையுடன் அந்த நபர் எழுதியிருந்தார்.

இதனால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சிறுவன் கடத்தப்பட்ட இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் 10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஹர்தோயில் இருந்து சித்தாப்பூர் வரை தன்னால் ஓட முடியும் என்றும் எனக்கு போலீஸ் வேலை வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் எழுத கூறியுள்ளனர். ராம்சிங் முதலில் விட்ட அதை எழுத்துப் பிழையை விட்டதால் சந்தேகத்திற்கிடமின்றி அவர்தான் சிறுவனை கடத்தி கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |