Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுவன் கடத்தி சென்றான்” பெற்றோரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் எங்களது மகளை கடத்தி சென்று விட்டான். எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணபதிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பின்னர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |