Categories
உலக செய்திகள்

சிறுவன் செய்த கொடூரம்… குடும்பமே ரத்த வெள்ளத்தில் மிதந்த… நெஞ்சை உருக்கவைக்கும் சம்பவம்…!!

சிறுவன் ஒருவன் தன் பெற்றோர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடக்கு சைப்பிரஸில் உள்ள Lefkonika என்ற நகரில் வசிக்கும் தம்பதிகள் Ibrahim cobanoglu (52), Bengu (48). இவர்களது மகன்கள் Erlap (18) மற்றும் Cinar cobanoglu(14) . இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் Ibrahim மற்றும் Bengu ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இளைய மகன் Cinar துப்பாக்கியால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இச்சிறுவன் பரிதாப உயிரிழந்துள்ளார். மேலும் கொல்லப்பட்ட தம்பதிகளின் மூத்த மகன் Erlap தன் சகோதரன் துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் தங்களை காப்பாற்றுமாறும் அக்கம்பக்கத்தினரிடம் சென்று உதவியை நாடியுள்ளதாக கூறபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் அந்த வீட்டிற்கு செல்லும் முன்பே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து ஒருவர் கூறுகையில், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தோம். அப்போது தம்பதியின் மூத்த மகன் என்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டு வந்ததாகவும் ஆனால் எங்களுக்கு துப்பாக்கி சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் அந்த குடியிருப்பில் சென்று பார்த்தபோது தம்பதிகள் கொல்லப்பட்ட நிலையில் கிடந்ததாகவும் அந்த சிறுவன் உடல் முழுவதும் ரத்தமான நிலையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்ததாகவும், இதனால் உடனடியாக காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |