சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது தீ பற்றி உடல் கருகியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள திருமலைகிரி மொட்டையன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சஞ்சித் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சஞ்சித் கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ மற்ற பட்டாசுகளின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதனால் சஞ்சித் அணிந்திருந்த ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி சஞ்சித் பலத்த காயமடைந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சஞ்சித் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.