Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய டீ கடை மாஸ்டர்…. பரபரப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி பகுதி ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த முத்து வயிரு என்பவருக்கு 16 வயதுடைய வசந்த் என்ற மகன் உள்ளார். அவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். முத்து வயிரு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறக்க படாத காரணத்தால் அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை டீ தம்ளரை சரியாக கழுவவில்லை என்று கூறி கடையில் டீ மாஸ்டர் ராஜகோபால் சத்தமிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென ராஜகோபாலன் சுடுதண்ணீரை சிறுவன் மீது ஊற்றிய தாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலன் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |