Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுவயதில் முக்கிய நபரிடம் பரிசு பெற்ற கமல்ஹாசன்… அரிதான புகைப்படம்…!!!

நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் Dr.ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

Film History Pics on Twitter: "4 year old KAMAL HAASAN receiving the  President's gold medal for his debut performance from Dr Radhakrishnan.  'Kalathur Kannamma' - released on this day @ikamalhaasan #61YearsOfKamalism  https://t.co/qDFAS5dNpT" /

நேற்று வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அவரின் அரிதான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சிறுவயதில் கமல்ஹாசன் Dr.ராதாகிருஷ்ணனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |