Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுவயது ஆசை நிறைவேறிவிட்டது… ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி வெளியிட்ட ஜாலியான வீடியோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரோஷினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

https://www.instagram.com/p/CSJ2AO7ncq2/

இந்நிலையில் ரோஷினி மால்களில் பொருள்கள் எடுக்க பயன்படுத்தப்படும் ட்ராலியில் அமர்ந்து செல்லுவது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் சிறுமியாக இருந்தபோது இதை செய்ய விரும்பினேன். இப்போது தான் அந்த ஆசை நிறைவேறியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |