Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி….  1ம் தேதி முதல் புக்கிங்…. ரெடியா இருங்க மாணவர்களே….!!!!

ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான முன் பதிவு தொடர்பாக கோவின் இயக்குனர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கோவின் இயக்குனர் ஆர்எஸ் சர்மா கூறுகையில் “15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கோவின் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே மாணவர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தளத்தில் முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |