சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அதோடு பாலியல் குற்றம் என்பதால் குண்டர் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார்.
இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு காவலில் நவீனை வைப்பதற்கு உத்தரவிட்டார். இதேபோன்று சாமியார்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சங்கர் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவின் பரிந்துரைப்படி சங்கரும் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.