Categories
மாநில செய்திகள்

சிறுவர்களே, இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்…. முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில்கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி 128 சிறார்களுக்கான உறுதியான நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் இணைநோய்கள் எதுவும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார். எனவே சிறுவர்கள் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

Categories

Tech |