Categories
தேசிய செய்திகள்

“சிறுவர்களை கட்டிவைத்து பீடி பிடிக்கச் சொல்லி துன்புறுத்தல்”…. பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடுமை…!!!

கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த கும்பல் மாணவர்களை அழைத்து மரத்தில் கட்டி வைத்து வாயில் பீடியை பற்ற வைத்து கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் தேவசந்திரா வார்டு முன்னாள் கார்ப்பரேட்டர் எஸ் ஸ்ரீகாந்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் அந்த வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அப்பகுதியை சேர்ந்த விவேக்(18) என்பவரையும், மேலும் ஐந்து சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |