போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும்.
இதனை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்நிலையில் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது. அப்படி செல்லும் அனைவருக்கும் அபராதம் மட்டும் இன்றி அவர்களது ஓட்டுநர் உரிமம் பல மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இந்நிலையில் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுகின்றனர். இதற்கு வாகன இயக்க சட்டத்தில் அனுமதி இல்லை.
எனவே சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் 1 ஆண்டு வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டும் அவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சீரா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.