பிரேசிலில் சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் நுழைந்து நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் கத்தி ஒன்றுடன் நுழைந்து குழந்தைகளின் மீதும், தடுக்க முயன்றவர்களின் மீதும் தாக்குதலை நடத்தினார். பின்னர் தன்னை தானே குத்திக் கொள்ளவும் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராணுவ காவல்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் காயமடைந்த குழந்தை ஒருவரையும், உயிரிழந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞருக்கு மனரீதியான பாதிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை என்றும் அந்த இளைஞரின் மீது இதுவரை எந்த வழக்குகளும் இல்லை என்றும் அவர் சிறுவர் பள்ளிக்கு கொலை செய்யும் நோக்குடன் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞர் குணமடைந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.