நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பதினோரு மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசர கால கடன் உதவி உத்தரவாத திட்டம் 2023 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவசரகால கடன் உதவித் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்றும் இத்திட்டம் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.