Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்களே…. கொரோனா நிவாரண உதவி….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று இந்திய பொருளாதரத்து அனைத்து பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டால் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மடங்கில் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் சில்லறை விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அக்கறை கொண்ட தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை பரிந்துரைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. அந்த குழு தனது அறிக்கையை இறுதி செய்து அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளில் ஒன்றை செயல்படுத்தக்கூடிய முனைப்பில், தொழில் முனைவதற்கான கொரோனா தொற்று உதவி மற்றும் நிவாரணம் என்ற பேரில் ஒரு திட்டத்தை அரசு வடிவமைத்து அறிவித்துள்ளது.

இந்த திட்ட 2 வெவ்வேறு கூறுகளை கொண்டது. கூறு 1 கீழ், கொரோனா தொற்று 19 பரவால்லால் வணிகரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள் தனி உரிமை அல்லது பங்குதாரர் அலகுகள், தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் செய்ய அல்லது ஒரு புதிய நிறுவனத்தை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாக தொடங்குவதற்கான உதவியை பெறலாம். இந்த திட்டத்திற்கான செலவு அதிகபட்சமாக ரூ.5 கோடியாக இருக்கலாம். எந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25% அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த உதவி பெற பயனாளர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவராக குறைந்தபட்சம் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அதனைத் தொடர்ந்து கூறு 2 இன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியில் அமைந்தியங்கி கொரோனா தொற்றில் 19 பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு நவீனமாக்கலை மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படும். இதற்கான கொள்முதல் செய்யப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதனையடுத்து ஆர்வமும் தகுதியும் கொண்ட தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மானிய உதவி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும் இந்த திட்டத்தை குறித்த கூடுதல் விவரங்களை பொது மேலாளர், ஏகாம்பரனார் தெரு, வேதாச்சலம் நகர், செங்கல்பட்டு என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |