Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி இதுதான்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் மாற்றப்படுகிறது. இந்நிலையில் 2002 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்ட வட்டி வீதங்கள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதங்களே தொடர்ந்து மார்ச் காலாண்டுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு – 4%

தபால் அலுவலக மாத வருமான திட்டம் – 6.6%

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) – 7.1%

சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் – 7.4%

தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8%

செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா ) – 7.6%

கிசான் விகாஸ் பத்திரம் – 6.9%

ஃபிக்ஸட் டெபாசிட் : 5.5 – 6.7%

 

Categories

Tech |