இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. இந்நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியினை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ஓராண்டுக்கான டெபாசிட் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போஸ்ட்-ஆபீஸ், வயதானோருக்கான சேமிப்பு திட்டம், NSC ஆகியவற்றின் வட்டி உயர இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கு இனி 7% வட்டி கிடைக்கும். இது மற்ற வங்கிகளின் வட்டியை விட அதிகமாகும்.