மாத வருமான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கான சூப்பர் திட்டம் குறித்து பார்க்கலாம்.
சிறு சேமிப்பு திட்டங்களின் மூலம் மாத வருமானம் பெற விரும்புவர்கள் போஸ்ட் ஆபீஸில் தங்களுடைய முதலீட்டை தொடங்கலாம். இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் தற்போது 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் காலாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசாங்கம் வட்டி விகிதத்தை முடிவு செய்யும் நிலையில், சிறுசேமிப்பு திட்டத்தில் பல காலாண்டுகளாக வட்டி விகிதமானது மாறாமல் இருக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இதனையடுத்து கூட்டுக்கணக்காக தொடங்க விரும்புவர்கள் ரூபாய் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த கூட்டு கணக்கில் 3 பேர் வரை சேர்ந்து கொள்ளலாம். அதன் பிறகு 18 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கை தொடங்கி கொள்ளலாம். மேலும் சிறு சேமிப்பு திட்டத்தை தொடங்குவார்கள் 5 வருடங்களுக்கு பிறகு கணக்கை மூடிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த பயனாளிகள் ஒருவேளை இறந்துவிட்டால், அவர்களுடைய குடும்பத்தினர் அல்லது நாமினிகளுக்கு பணம் கிடைக்கும்.