Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறைக்கு போகவும் வாய்ப்பிருக்கு… இதனை மீறாதீர்கள்… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், காவல்துறையினர் 1,000 பேர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகள் 14 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு  காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று  14 வாகனங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் 18 மைக் இணைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இதனையடுத்து அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, சிறை தண்டனை அனுபவிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் எச்சரித்துள்ளார். அதன்பின் இ- பதிவு சான்றிதழ் வைத்திருந்தாலும் மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுபோன்று விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |