போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆரியன் கானுக்கு அவருடைய தந்தை சாருகான் மணியாடர் அனுப்பியுள்ளார்.
கடந்த 3ஆம் தேதி இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜாமின் மனு தாக்கல்செய்த ஆரியர்கானுக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார் ஆரியன் கானின் வழக்கறிஞர். இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட இந்த மனு மீதான விசாரணை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதற்கிடையே விசாரணை கைதியாக உள்ள மகன் ஆர்யன் கானுக்கு சிறையிலுள்ள கேன்டீனில் செலவு செய்வதற்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஷாருக்கானின் மனைவி ஆரியன் கானுக்கு வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்துச் சென்றதாகவும் ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதை அனுமதிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.