Categories
தேசிய செய்திகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள்…. என்கவுண்டர் செய்த போலீசார்…. பரபரப்பு….!!!!

பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிலர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினரின் பதிலடியில், தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இந்த என்கவுண்டரின் போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். சப்இன்ஸ்பெக்டரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. அதன்பின் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த 2 பேரும் பீகார் சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகளான சகோதரர்கள் ராஜ்னீஷ், மனீஷ் என்பது தெரியவந்தது. இந்த என்கவுண்டர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |