செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற ஒரு மாபெரும் இயக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாக உலகம் உள்ளவரை தலைக்கும், ஓங்கும், வளரும் என்கின்ற அந்த கருத்தை எம்ஜிஆர் அவர்கள் அன்றைக்கு கழகத்தைத் தோற்றுவித்தபோது சொன்ன கருத்துக்கள் . அவருடைய கருத்துக்கள் எந்த அளவிற்கு ஒரு தொலைநோக்குப் பார்வையோடு கழகம் 50 வது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த வேளையில் உலகத்திலேயே எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய சிறப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் எந்தக் கட்சிக்கும் அந்த ஒரு வரலாறு கிடையாது. அதிமுக ரத்தம் சிந்தி உருவான இயக்கம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டர், புரட்சித்தலைவி அம்மாவின் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன் சாகும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தான் இருப்பார். எங்கேயும் போகமாட்டார், சிறையில் இருந்து வந்தவர்கள் அப்போது ஏன் போகவில்லை அம்மாவுடைய நினைவிடத்திற்கு. அப்போது போகவில்லை என்று பேசியுள்ளார்.