Categories
சினிமா தமிழ் சினிமா

சிறையிலிருந்து வெளியே வரும் சின்னத்திரை நடிகர் அர்ணவ்…. வெளியான தகவல்….!!!!

சின்னத்திரை நடிகை திவ்யா தன்னுடைய கணவர் ஆர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கரு எந்த நேரத்திலும் கலையலாம் என்றும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே அர்ணவ்வ் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் அர்ணவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்த அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்ணவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை குடும்ப வழக்காக பார்க்க வேண்டும் குற்ற வழக்காக பார்க்க கூடாது என்று முன்வைத்து வாதாடினார். இதனை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |