சிறையிலிருந்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் தம்பி ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தம்பி ராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த ஒரு மரத்தில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் தம்பியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தம்பி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.