சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை மற்றும் கொள்ளை விழக்கில் சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்திவேல் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் சிறையின் இரும்பு கதவு கம்பியில் சக்தி வேல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் கழுத்து இறுகியதால் சக்திவேல் கூச்சலிட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு கைதிகள் விழித்து கொண்டு சக்திவேலை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.