Categories
மாநில செய்திகள்

சிறையில் சந்தித்து மனம் விட்டு பேசி…. பிரியங்கா காந்தி கண் கலங்கினார்…. நளினி…!!!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன்.

சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது, அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார் என நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி குடும்பத்தினரை பார்க்கவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் நான் இல்லை என்று கூறிய அவர், கைதான முதல் நாளில் இருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன். பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்றார்.

Categories

Tech |