சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே இருக்கும் மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் என்பவர் கடந்த 3 மாதங்களாக சிற்ப வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஐயப்பன் சிறுமியை அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காளியப்பநல்லூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.