Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றும் போட்டி…. தொடர்ந்து 6 மணி நேரம்…. சாதித்துக் காட்டிய நிறை மாத கர்ப்பிணி….!!

பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி  தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் இவரது மனைவி 29 வயதான ஷீலா தாஸ் இவர் தற்போது 9மாத கர்ப்பிணியாக உள்ளார் . ஷீலாதாஸ் குத்துச்சண்டை,  தடகளம்,  பளுதூக்குதல்,கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றுள்ளவர். அதேபோன்று  தேசிய அளவில் வலு தூக்குதல் பிரிவில் சாதனை செய்து இரும்பு பெண் என்ற பட்டம் பெற்றுள்ளவர்.

இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அணைக்காடு சிலம்ப கூடம் சார்பில் உலக சாதனை நிகழ்த்த பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில்லுள்ள ஒரு மண்டபத்தில் சிலம்பம் சுற்றும் போட்டி நடந்துள்ளது . அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான  போட்டியாளர்கள் அந்த மண்டபத்திற்கு வந்துள்ளனர். ஷீலா தாஸை கண்ட அனைவரும் பார்வையாளராக வந்திருக்கலாம் என்று கருதியுள்ளனர் .

ஆனால் அவரோ தன் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதையும் பொருட்படுத்தாமல் சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதனைக்கேட்ட போட்டியாளர்களும் போட்டி நடத்துபவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்

பின்னர் ஷீலாதாஸ் நான் போட்டியில் பங்கேற்பது உறுதி என்று கூறி பங்கேற்றுள்ளார்.  காலை 6.45 மணிக்கு சிலம்பம் சுற்றத் ஆரம்பித்த அவர் இரட்டை மற்றும் ஒற்றைசிலம்பம் என்று தொடர்ந்து 6 மணி நேரம் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் . ஷீலா தாஸ் நிருபர்களிடம் பேசியபோது எனக்கு 7 வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் சிலம்பு, குத்துச்சண்டை கராத்தே போன்ற விளையாட்டுகளை கற்றுக் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான  பரிசுகள்   பெற்றிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

மேலும்  நான் 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் டாக்டர்களின் முழு ஆலோசனையை பெற்ற பின்னரே இந்த சாதனையை செய்துள்ளேன் என்று  தெரிவித்துள்ளார். மேலும்   உடல் உழைப்பை தாண்டி மன தைரியம்   இருந்ததால்  என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்துள்ளது .என்போல்  மனதில் தைரியம் இருந்தால் அனைவரும்  சாதிக்கலாம்  என்று உற்சாகமாய் கூறியுள்ளார் .

Categories

Tech |