Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிலம்பம் போட்டி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டுக்கள்….!!!!!!!

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மூன்றாவது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப்  இந்தியா  அண்ட் – 2022 சார்பில் மூன்று நாட்கள் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி  இந்த கல்லூரியில் இயந்திரவியல் துறை நான்காம் வருட மாணவன் ஆசிக் உடுமன் ஸ்டிக் பென்சிங்  என்னும் சிலம்பம் போட்டியில் 3 தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

மூன்றாம் வருடம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் சஞ்சய் ஸ்டிக் பென்சிங், தனிநபர் ஸ்டிக் போன்ற பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் விஜயன், துணை முதல்வர் நபிஷா பேகம், உடற்பயிற்சி அலுவலர் தங்கராஜ், உடற்கல்வி இயக்குனர் செல்வநாயகம் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் போன்றோர் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |