Categories
தேசிய செய்திகள்

சிலிண்டருக்கான மானியம்… உங்க அக்கவுண்ட்ல ஏறுதா..? இல்லையா…? எப்படி தெரிஞ்சுகிறது…? வாங்க பாக்கலாம்…!!!

மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

இதில் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னர் Give your feedback online என்பதைக் கிளிக் செய்யவும்.

அதற்குப் பின் வரும் பக்கத்தில் உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும். இதற்குப் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

Categories

Tech |