Categories
மாநில செய்திகள்

சிலிண்டருக்கு பூஜைசெய்து….. நூதன முறையில் போராட்டம் நடத்திய மக்கள்….!!!!

கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலிண்டருக்கு பூஜை செய்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |