பள்ளி சமையல் அறையில் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே இருக்கும் காஞ்சிக்கோவிலில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய நேரத்தில் சத்துணவு சவைப்பதற்காக சமையல் பணியாளர்கள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் அடுப்பு எரியாததால் பணியாளர்கள் சிலிண்டரை சற்று அசைத்து பார்த்துள்ளனர். இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சிலிண்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக சமயலறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அனைத்துவிட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.