Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சிலிண்டரை திறந்து தீ வைத்து விடுவேன்” மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீ வைத்து விடுவதாக சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பகுதியில் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடிபோதையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்று குடியிருப்பு வளாகத்தில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை அங்கு வசிக்கும் போலீஸ் குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கியாஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்து விடுவேன் என சத்தம் போட்டவாறு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் நஜ்மல்ஹோடா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |