Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலிண்டரை மாற்றிய மாஸ்டர்…. மளமளவென பற்றிய 7 கடைகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

7 கடைகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட்டில் பிரதான நுழைவு வாயிலின் வலது புறத்தில் ஆறுமுகம் என்பவரது டீக்கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் பலகார மாஸ்டரான பரமசிவம் என்பவர் கியாஸ் அடுப்பு மூலம் வடை மற்றும் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கியாஸ் தீர்ந்து போனதால் சிலிண்டரை எடுத்து ரெகுலேட்டரை திறந்து பரமசிவன் வேறு சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிந்து கொண்டிருந்த பாய்லர் அடுப்பின் மீது தீப்பற்றி மளமளவென ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே ஓடி வந்தனர்.

அதன்பின் தீ மளமளவென அருகில் இருக்குமாறு கடைகளுக்கு பரவிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடைகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இந்த தீ விபத்தில் 7 கடைகளும் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சாம்பலாகியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |