Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் டெபாசிட் தொகை அதிரடி உயர்வு.. நாளை(ஜூன் 16) முதல் அமல்…. ஷாக் நியூஸ்….!!!!

புதிய கியாஸ் சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத்தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 ஆக இருந்தது. அது தற்போது ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது. அதனைப் போலவே ஐந்து கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்பு தொகை 800 ரூபாயில் இருந்து 1,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெகுலேட்டருக்கான 150 ரூபாய் கட்டணம் தற்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அதாவது ஜூன் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு சிலிண்டர் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை விவரம்
மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் விலை– ரூ -1065
சிலிண்டருக்கான பாதுகாப்புத் தொகை— ரூ.2200
ரெகுலேட்டருக்கான பாதுகாப்பு— ரூ.250
பாஸ்புக்கிற்கு —-25 ரூபாய்
குழாய்க்கு —-150 ரூபாய்

Categories

Tech |