சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், வாட்ஸ்அப், மொபைல் ஆப் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ஆன்லைன் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது எப்படி என்ற இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய தபால் துறை சார்பாக இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போல இதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் செயலி தான். இந்த செயலியில் சிலிண்டர் முன்பதிவு செய்வது மிகவும் சுலபம்.
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் India post payments bank ஆப் டவுன்லோடு செய்து லாகின் செய்ய வேண்டும்.
உள்ளே சென்றவுடன் Pay Bills வசதியின் கீழ் LPG cylinder என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயர், விநியோகஸ்தர், எல்.பி.ஜி ஐடி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
அடுத்ததாக, Get Bill கொடுத்து, நீங்கள் சிலிண்டருக்கான பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
பணத்தைச் செலுத்தியவுடன் confirm கொடுத்ததால் உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டவுடன் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டு விடும்.
சிலிண்டர் முன்பதிவு செய்ததற்கான SMS உங்களுடைய மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.