பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
பேடி எம் நிறுவனம் தங்களது அப்ளிகேஷன் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கேஷ் பேக் வழங்குகின்றது. இந்த சலுகையை பெற பேடிஎம் அப்ளிகேஷனில் GAS1000 அல்லது FREEGAS கூப்பன்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.