பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைத்து காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கிழக்கு மாவட்ட துணை தலைவர் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் தாண்டானூர் பழனி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ், மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் சேலம் பாலா உட்பட பலர் பங்கேற்றனர்.