Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம்…. உங்க accountக்கு வருதானு…. எப்படி தெரிஞ்சிக்கிறது..? வாங்க பார்க்கலாம்…!!!

மத்திய அரசால் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை இந்த வழிமுறையின் மூலம் காணலாம்.

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் எல்பிஜி குறித்து வாடிக்கையாளர்கள் மனதில் பலவிதமான கேள்விகள் எழும்புகின்றது.

அதில் முக்கியமானது தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் மானியம் உள்ளது என்பது தான். உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

அறிந்துகொள்ளும் வழிமுறகள்:

1.முதலில் Mylpg.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2.உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின்(HP கேஸ், பாரத் கேஸ் மற்றும் Indane ) பெயரை கிளிக் செய்ய வேண்டும்.

3.இதையடுத்து பார் மெனுவுக்குச் சென்று “Give your feedback online” என்பதைக் கிளிக் செய்யவும்.

4.அதில் உங்களின் செல்போன் நம்பர், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

5.அதன் பிறகு, “Feedback Type” என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் “Complaint” என்பதை  தேர்ந்தெடுத்து அதில் “Next” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6.உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். இதில் உங்களின் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா? இல்லையா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |