ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றன. அதிலும் தற்போது புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் மக்களே நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. அதன்படி ஜனவரி 1 முதல் மாறவிருக்கும் புதிய விதிமுறைகளை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்:
ஏடிஎம் பரிவர்த்தனைக் அதற்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க 20 ரூபாய் கட்டணம் இது வரை வசூல் செய்யப்பட்டு வந்தது. இனி ஜனவரி 1-ஆம் தேதி முதல் இருபத்தி ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே ஜனவரி மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தபால் வங்கி:
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும், படம் போடவும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி:
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கட்டணங்களுக்கான சேவை கட்டணத்தை ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது.
ஆடைகளின் விலை உயர்வு:
ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விகிதம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதனால் ஆடைகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
EPF நாமினி சேர்த்தல்:
டிசம்பர் 31, 2021-க்குள் EPF நாமினேஷனை முடிக்க வேண்டும் . இது போன்ற சுமூகமான செயல்முறையை வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, EPF சந்தாதாரர்கள் இறந்து விட்டால், அவரது நாமினி ஆன்லைனில் எளிதாக உரிமைகோரலை தாக்கல் செய்யலாம்.
ஜிஎஸ்டி மாற்றங்கள்:
ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்படும் பயண கட்டணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதால் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள், ஓலா மற்றும் ஊபர் டாக்ஸி, ஆட்டோக்களில் பயண கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.