Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குவோருக்கு இன்று முதல்… அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு, வணிக சிலிண்டர் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் வணிக சிலிண்டர் விலை 17 ரூபாய் அதிகரித்து ரூ.1,446.50-ல் இருந்து ரூ.1,463.50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மானிய சிலிண்டர் இன் விலையில் மாற்றமின்றி 710 ரூபாயாக உள்ளது. சிலிண்டர் விலை விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://iocl.com/products/indanegas.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த சிலிண்டர் விலை அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |