தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் நாடுமுழுவதும் உள்ள நிலையில் இதுபோன்ற கூடுதல் பணம் வசூலிப்பதும் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ .500 கோடிக்கும் மேல் மக்களிடமிருந்து சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.
எனவே சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் . இந்த மனுவிற்கு பதிலளித்த எண்ணை நிறுவனங்கள் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய கூடுதல் பணம் வசூலிக்கப்பவர்களின் சம்பந்தப்பட்ட கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இதனை தொடர்ந்து 4 முறை இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தால் விநியோகத்தாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார் .பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு நுகர்வோர் உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள் எம் .சத்தியநாராயணன் மற்றும் ஆர் .ஹேமலதா போன்றோர் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் அலுவலகத்தில் நிறுவனம் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்றும் வினியோகம் செய்வதற்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். எண்ணை நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வக்கீல் சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து நுகர்வோரில் புகார் அளிக்க வசதிகள் உள்ளதாகவும் புகார்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய கருத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கியாஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.