Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு பயன்படுத்த தொடங்கியுள்ள ஏழை குடும்பங்கள்…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!

சமையல் எரிவாயு விலை உச்சம் தொட்டதை தொடர்ந்து பல ஏழை குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் இணையதளத்தில் இந்தி மொழியில் வெளியான கட்டுரை செய்தி ஒன்று 42 சதவிகிதம் கிராம மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் மீண்டும் விரகு அடுப்பு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள ராகுல்காந்தி கடந்த நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்னர் வர்த்தக ரீதியாக விற்கப்படும் சிலிண்டரின் விலை 266 ரூபாய் அதிகரித்து இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மலைத்துப் போன நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் சிலிண்டர் வாங்குவதை கைவிட்டுவிட்டு மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் வாகனம் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்வதாகவும் அதற்கு பிரேக்கும் ரிப்பேராகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |